என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்யூ கட்சியினர் முற்றுகை"
திண்டுக்கல்:
சேலம்- சென்னையிடையே 8 வழிச்சாலை அமைக்க பல்வேறு மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். வெளியே அனுப்பினாலும் மீண்டும் நடைபயணம் தொடரும் என அறிவித்துள்ளதால் போலீசார் அவர்களை விடுவிக்காமல் உள்ளனர்.
இதனை கண்டித்தும் விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அமைச்சர் சீனிவாசனின் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது நடைபயணம் மேற்கொண்டவர்களை விடுவிக்க வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். #salemtochennaigreenexpressway